Sunday, March 21, 2010

ஈசனும் இயற்பியலும்!

அடிமுடி காண்பார் இருவர்
படிகண் டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன் என்று அச்சுதன்
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந்தானே!

இப்பாடலை விளங்குவதற்கு முன்னர் அடிப்படையான சில இயற்பியல் கூறுகளை ஆய்வு செய்வோம்!

அலை
அலை என்பது , ஆற்றல் கொண்ட ஒரு மூலத்தினால்,ஊடகத்தில் ஏற்படும் அதிர்வுகளால், ஊடகத்தில் பரவும் , ஆற்றல் பரிமாற்றம் செய்
இயக்க நிலையாகும்.



இவ்வலை மூலம், அலை பரவும் ஊடகத்தில் உள்ள
துகள்கள், அலையியக்கத்தின் திசைக்கு கொண்டுள்ள
சர்பான அதிரும் திசையைக் கொண்டு குறுக்கலை, நெடுக்கலை என வகைப்படுத்தப்படும். இவற்றை விளக்கினால்,இது இயற்பியல் விரிவுரையாகி விடும்.இணைக்கப்பட்ட படம் பார்த்து நினைவு கூர்க!


Check Spelling
Crust-முகடு, முடி
Trough-அகடு,அடி
Wave Length-அலை நீளம்
Period -அதிர்வுறு நேரம்
frequency-அதிர்வெண்
speed-அலைவேகம்
என்று தமிழில் அழைக்கப்படுகின்றன.இணைக்கப்பட்ட சமன்பாடுகளை பார்த்து நினைவு கூர்க!






வெட்ட வெளி , சுத்த வெளி என்பது ஆங்கிலத்தில் எதர்(Ether)என்று அழைக்கப்படும்.இவ்வெளியில் மின்காந்த அலைகள் பரவிக்கிடக்கிறது. இவ்வலைகள் அவற்றின் அதிர்வெண், அலை நீளங்களுக்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றன! படம் பார்த்து தெளிக!


இவ்வலைக் கற்றையில் கண்ணுக்கு புலனாவது அகச்சிவப்பு கதிர்களுக்கும், புற ஊதா கதிர்களுக்கும் இடைப்பட்ட ஒளிக்கதிர்கள் தான். இதற்கு மேற்பட்ட அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகள் மீப்பெரும் ஆற்றல் கொண்டவை!
சிவனை அடி முடி இல்லாதவன் என்றும், காலத்தைக் கடந்தும் நிற்பவன் என்றும் , எல்லையில்லா ஆற்றல் உடைய எல்லாம் வல்லவன் என்றும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன!
மீப்பெரும் ஆற்றல் நிலைகளில் யாவும் அலைகளே என்பது,ஐன்ஸ்டீன்,ஷிரோடிங்கர் என்பவர்களால் நிலை நிறுத்தப்பட்ட கோட்பாடு.
சார்பற்ற நிலையில் காலம் என்பது இருக்க முடியாது என்பதும் சார்பியல் கொள்கையே!

அத்தகைய ஒரு எல்லையற்ற, வற்றாத ஆற்றல் எதெரில்(சுத்த வெளியில் ), காலமற்ற சார்பற்ற நிலையில் ஏற்படுவதாகக் கொள்வோம்.

மீப்பெரும் ஆற்றல் நிலைகளில் யாவும் அலைகளே என்ற கோட்பாட்டின் ப்டி அதனை ஒரு அலையாக கற்பனை செய்ய முயல்வோம்!அவ்வலை காலமே அற்ற காலத்தில் அலைவுறு நேரம்(Period=0), அடியும், முடியும் அற்ற அலையாக ,முடிவிலியை அதிர்வெண் ணாக கொண்டு இருக்க வேண்டும் .


தொடரும்..

No comments:

Post a Comment