Friday, June 18, 2021

பேருணர்வு

உயிர்ச் சங்கிலி
அறுபடும் பொழுதில்
அதில் கோர்த்த 
உணர்வுகள்
உருண்டோடிய
அதிர்வில்
காலப் பெட்டகம்
உடைந்தது.
அகம் உடைய
அறிவு அற்று
உணர்வு மட்டும்
உடையவனானதில்
பேருணர்வன் ஆனேன்.

No comments:

Post a Comment